NEWS
இனி உங்க வாகனங்களுக்கு “FANCY” நம்பர் பிளேட் வாங்குவது ரொம்ப ஈஸி.. இதோ எளிய வழிமுறை..!
இந்தியாவில் தற்போது வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பெரும்பாலானோர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். பேருந்து மற்றும் ரயில்களுக்கு காத்திருக்கும் காலம் போய் தற்போது எந்த ஒரு இடத்திற்கும் தங்கள் சொந்த வாகனத்திலேயே மக்கள் பயணிக்கிறார்கள்.
இப்படி வாகனம் பயன்படுத்துபவர்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் அவர்களின் வாகனங்களுக்கு FANCY நம்பர் பிளேட்டை வாங்க விரும்புகின்றனர். அந்த பேன்சி நம்பரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து மிகவும் சுலபமான முறையில் எப்படி பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
- அதற்கு முதலில் பொது பயனராக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அடுத்ததாக நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள வட்டாரப் போக்குவரத்தை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான FANCY நம்பரை தேர்வு செய்து அதற்கு தேவையான பதிவு கட்டணத்தையும் செலுத்தி நீங்கள் முன் பதிவு செய்ய வேண்டும்.
- பின்னர் நீங்கள் விரும்பும் FANCY நண்பருக்கான ஏலத்தில் கலந்து கொண்டு உங்களுடைய நம்பர் கேட்டுக்கு தேவையான ஏலத்தை அதிகரிக்க செய்யுங்கள். பிறகு அதற்கான தொகையை செலுத்தி நம்பரை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இந்த வழிமுறைகள் அனைத்தையும் நீங்கள் சரியான முறையில் பின்பற்றினால் மட்டுமே போதும் மிகவும் சுலபமாக உங்களுக்கு பிடித்த நம்பரை உங்கள் வாகனங்களுக்கு நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.