TECH
இனி யாருமே ஏமாத்த முடியாது.. Google Pay, Phone Pe பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. புதிய அப்டேட்..!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் செல்போன் மூலமாக எளிதில் முடித்து விடுகின்றனர். பெரும்பாலான மக்கள் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த செய்திகள் மூலமாக விரைவில் பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால் அவ்வப்போது இதில் சில சலுகைகள் கிடைப்பதால் மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள்.
டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் UPI மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகத் தன்மையுடனும் செய்வதற்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது யுபிஐ கட்டணங்கள் பின்னுக்கு பதிலாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்களில் ஏற்கனவே உள்ள இந்த அம்சங்களை பயன்படுத்தி யூ பி ஐ கட்டணங்களை பாதுகாப்பானதாகவும் எளிமையாகவும் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வங்கி விவரங்கள் அல்லது பின்னின் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் பயனர்களுக்கு இந்த புதிய மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலமாக கைரேகை அல்லது முகம் ஏற்கனவே கணினியில் சேமிக்கப்பட்டுள்ள நபர் மட்டுமே பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்த நடவடிக்கைகள் மூலமாக மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.