அடச்சீ, நீ எல்லாம் ஒரு போலீஸ்காரனா?… கடற்கரைக்கு வந்த காதல் ஜோடி… காதலனை கடைக்கு அனுப்பிவிட்டு இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர்…!

Spread the love

புதுச்சேரி காரைக்கால் கடற்கரையில் பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் பறிப்பு உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பரண்டு உத்தரவின் பெயரில் கடற்கரையில் கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடற்கரை பகுதியில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டதுடன் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கடற்கரைக்கு வந்த ஒரு இளம் காதல் ஜோடியை அப்போதைய ரோந்து பணியில் இருந்த போலீஸ் ராஜ்குமார் (35) என்பவர் போலீஸ் பூத்துக்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தினார்.

அப்போது உடன் வந்த காதலனை அருகில் கடையில் சென்று தண்ணீர் வாங்கி வருமாறு அனுப்பிவிட்டு அவரின் காதலியான இளம் பெண்ணை மிரட்டி பணம் கேட்டதாகவும் உடலில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த காதல் ஜோடி உறவினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து போலீஸ் பூத்துக்கு முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு கிளப்பியது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த சில வாரங்களுக்கு பிறகு அப்போதைய மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணி காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ்காரர் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனாலும் இது தொடர்பான துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது இதன் முடிவில் ராஜ்குமார் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியது மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என நிரூபிக்கப்பட்டதால் அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் முத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ்காரரை இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

2 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

6 minutes ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

19 minutes ago

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

23 minutes ago

“ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடியா?…. மொத்த பட்ஜெட் ரூ.180 கோடி”… தவெக-வை மிரள வைத்த கார்ப்பரேட் டீலிங்…. அம்பலமான ரகசியம்….!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…

27 minutes ago

FLASH NEWS: திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… அம்பலமாகப் போகும் அந்த ரகசியம்….!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…

49 minutes ago