கைம்பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்த போலீஸ்காரர்…. கடைசியில் அந்த வீடியோவை காட்டி…. விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்….!

Spread the love

விருதுநகரில் போலீஸ்காரர் ஒருவர், கைம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலரே, ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் விருதுநகரில் தையல் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவருக்கு, ஆமத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் பழகியுள்ளார். அவ்வாறு பழகும்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து பல்வேறு கட்டங்களாக சுந்தர்ராஜ் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் மகளை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுவதாகக் கூறியும் அவர் பெரும் தொகையை வாங்கியதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சுந்தர்ராஜ் அந்தப் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததோடு, சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடுவேன் என மீண்டும் மிரட்டியுள்ளார்.

தாளமுடியாத துன்பத்திற்கு ஆளான அந்தப் பெண், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார், சுந்தர்ராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இதே விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

2 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago