குற்றவாளியுடன் ரோந்து வந்த காவலர்…! “இரவில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த திருமணமான இளம்பெண்…” பின் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2025

Spread the love

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொழில்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவர் கடந்த 19-ஆம் தேதி இரவு தன் புதிதாக வாங்கிய மின்சார ஸ்கூட்டியை ஓட்டி பழகியுள்ளார். அந்த சமயம் அங்கு வந்த தனது ஆண் நண்பருடன் என்று இளம்பெண் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்க்கும் பிரபாகரன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த கௌதமன் என்பவரும் பிரபாகரனுடன் இருந்துள்ளார். கௌதமன் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் என கூறப்படுகிறது. இருவரும் இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இளம் பெண்ணிடமும் அவரது ஆண் நண்பரிடமும் பிரபாகரன் இங்கு நின்று என்ன செய்கிறீர்கள்? என விசாரித்து இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

   

மேலும் அவர்கள் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளனர். மேலும் ஆண் நண்பரிடம் 8000 பணத்தை பறித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கௌதமனை போலீசார் தேடி வருகின்றனர்.