இது பிரதமர் மோடியின் பரிசு…! ரூ.100 பொருட்களின் விலை ரூ.45 ஆயிடுச்சு…. சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி…. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2025

Spread the love

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் பாஜக எம்.பி ரவி கிஷன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஒரு ரூபாய் பொருட்களின் விலை 40 முதல் 45 பைசாவாகவும், 100 ரூபாய் பொருட்கள் 45 ரூபாயாகவும் இருக்கும். இது மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு என கூறினார்.

அவரது வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பக்கத்தில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் ரவி கிஷனுக்கு நிதி அமைச்சரிடம் இருந்து விரைவில் அழைப்பு வரும். பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பொய் கூறி உலக சாதனை படைத்து வருகின்றனர் என கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொருட்களின் விலை 50% மேல் குறைந்ததாக ரவி கிஷன் கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.