மத்திய அமைச்சர் குரலில் பேசிய உறவினர்…! “மகனுக்கு ரூ.38 கோடி பரிசு…” ரூ.4 கோடியை இழந்த முன்னாள் வங்கி ஊழியர்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2025

Spread the love

மகாராஷ்டிரா  மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் சூரியகாந்த். இவர் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019-ஆம் ஆண்டு சூரியகாந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட உறவினர் ஒருவர் தனது மகன் உளவுத்துறையில் வேலை பார்ப்பதாகவும், அவருக்கு இந்திய அரசு 38 கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக செயல்முறை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு பரிசு வழங்குவதற்காக தனக்கு பணம் தேவைப்படுகிறது. நீங்கள் பணம் கொடுத்தால் அந்த பணத்தை பரிசுத்தொகை வந்தவுடன் திரும்ப தந்து விடுவேன் என உறவினர் கூறியுள்ளார். மேலும் சூரியகாந்தை நம்ப வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் குரலில் போலியாக கான்ஃபரன்ஸ் காலில் பேச வைத்துள்ளார்.

   

இதனை நம்பிய சூரியகாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல்வேறு வங்கி கணக்குகளில் நான்கு கோடி ரூபாய் வரை பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை திருப்பி கேட்ட போது உறவினர் தனது மகன் சிறப்பு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் வந்ததும் பணத்தை தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சூரியகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதும்