யார் இந்த சுலோச்சனா?… நில அபகரிப்பு, கொலை முயற்சி… ‘லேடி டான்’ போட்ட மாஸ்டர் பிளான்… மிரள வைத்த ரவுடி பெண் சிக்கியது எப்படி?…!!

By Gayathri on ஐப்பசி 15, 2026

Spread the love

மதனப்பல்லே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி நில அபகரிப்பு, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ‘லேடி டான்’ கோனேட்டி சுலோச்சனாவை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நீருக்கட்டுப்பல்லையைச் சேர்ந்த இவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் மோசடி தொடர்பாக ஏற்கனவே 14 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் சட்டவிரோதச் செயல்களால் காவல்துறையின் ‘ரவுடி ஷீட்’ பதிவேட்டிலும் இவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீரஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மதனப்பல்லே டவுன்-1 போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பிடிபட்ட சுலோச்சனாவை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ள காவல் துறையினர், இவருக்குப் பின்னால் உள்ள நபர்கள் மற்றும் பிற நில அபகரிப்பு விவகாரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.