FLASH: திமுக நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் போலீஸ் சோதனை.. பெரும் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போடம்பட்டியில் உள்ள GEN Z திமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த அன்பானந்தம் என்பவரை, நள்ளிரவில் போலீசார் திடீரென கைது செய்ய முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அன்பானந்தத்தை எங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறி அவரது பெற்றோரிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, போலீசார் அவரது வீட்டிற்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அந்த இடமே பதற்றமாக மாறியது.

ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு மீது அன்பானந்தம் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்ததே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே காவல்துறை இவ்வாறு நள்ளிரவில் அராஜகமாகச் செயல்பட்டு வருவதாக திமுகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே தற்போதைய அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.