சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள பிரபல நடிகர் ரவி மோகன் அவர்களின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ₹3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு வைரச் செயின் ஆகியவை திருடு போயுள்ளன. இது குறித்து நடிகரின் மேலாளர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, ரவி மோகன் வீட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. வீட்டில் பணியாற்றி வரும் 2 ஓட்டுநர்கள், 1 தனிப்பட்ட உதவியாளர் , மற்றும் ஒரு பணிப்பெண் உட்பட மொத்தம் 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
