முத்தம்.. கட்டியணைப்பு… ‘நைட் ஷிப்ட்’டில் பெண் போலீஸ் செய்த காரியம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி.. இணையத்தைக் கலக்கும் ‘ரொமான்ஸ்’ வீடியோ….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாத்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய காவல்துறையினரே, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ்’ செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் படேல் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்தார். இவர் ஓரை கோட்வாலி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த நிலையில், இந்த அநாகரிகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 24-ம் தேதி இரவு நேரப் பணியில் (Night Shift) கான்ஸ்டபிள் அரவிந்த் படேல் இருந்தபோது, அதே கட்டுப்பாட்டு அறையில் பயிற்சிப் பணியில் இருக்கும் ஓர் இளம்பெண் கான்ஸ்டபிளும் அங்கிருந்துள்ளார். கட்டுப்பாட்டு அறைப் பணி என்பதால் இருவரும் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்தனர். அப்போது, பணியில் இருந்த அரவிந்த் படேலின் பின்னால் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த அந்த பெண் கான்ஸ்டபிள், அவரை நெகிழ்வோடு கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். பின்னர் அரவிந்த் இருக்கையிலிருந்து எழுந்தபோதும், அந்தப் பெண் போலீஸ் அவருடன் தொடர்ந்து நெருக்கமாக நடந்துகொண்ட காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

   

இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. புனிதமான காவல் நிலையத்தில் பணி நேரத்தில் இப்படி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதனையடுத்து, இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்த எஸ்பி வினய் குமார் சிங், கான்ஸ்டபிள் அரவிந்த் படேலை உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டதோடு, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DZ_-Ngjppk0/?utm_source=ig_embed&ig_rid=AKRkwiuXmNmfYbWn7ZSj0c4

 

இருப்பினும், இந்த விவகாரத்தில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. சிசிடிவி காட்சிகளின்படி பெண் போலீஸ் தான் முதலில் கான்ஸ்டபிள் அரவிந்தை முத்தமிட்டுக் கட்டியணைக்கிறார்; ஆனால் ஆண் கான்ஸ்டபிள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், பெண் போலீஸ் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து எஸ்பி வினய் குமார் சிங்கிடம் கேட்டபோது, “காவல்துறையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியமானது. பணி நேரத்தில் தவறான நடத்தை கொண்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது, அதன் அறிக்கை கிடைத்தவுடன் அந்தப் பெண் பயிற்சி கான்ஸ்டபிள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று விளக்கம் அளித்துள்ளார்.