மகள்களை ஏற்றி விட்ட தாய்…! வேகமாக நகர்ந்த ரயில்…. நொடியில் நிலைதடுமாறிய பெண்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

இரயில் நிலையத்தில் குழந்தைகளை முன்கூட்டியே இரயிலில் ஏற்றிவிட்டு, தான் ஏற முயன்றபோது இரயில் நகர்ந்ததால் நிலைதடுமாறி விழுந்த தாயை, அருகில் இருந்த காவலர் ஒருவர் மின்னல் வேகத்தில் காப்பாற்றிய பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுடன் இரயில் நிலையத்திற்கு வந்த தாய் ஒருவர், இரயில் புறப்படத் தொடங்கிய அவசரத்தில் தனது குழந்தைகளை மட்டும் முதலில் பெட்டிக்குள் ஏற்றியுள்ளார். அதன் பிறகு தானும் ஏற முயன்றபோது இரயில் வேகம் எடுக்கவே, அவர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அங்கு நின்ற காவலர் ஒருவர் உடனடியாக அவரைப் பிடித்துப் பாதுகாப்பாக இழுத்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

   

எனினும், குழந்தைகள் இரயிலுக்குள்ளும் தாய் நிலையத்திலும் பிரிந்து நின்ற இந்தச் சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நகரும் இரயில்களில் ஏற முயல்வது எந்தளவுக்கு ஆபத்தானது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.