அக்டோபர் 17 அன்று மகாராஷ்டிராவின் அகோலா ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. நகர்ந்து கொண்டிருந்த ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த 55 வயதுப் பெண்மணியை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சோனல் இங்ளே மிகுந்த துணிச்சலுடன் விரைந்து சென்று காப்பாற்றினார்.
இந்தத் துணிச்சலான மீட்பு நடவடிக்கை அங்கு கூடிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, வெறும் 7 நாட்களுக்குள் சோனல் இங்ளே நிகழ்த்தும் இரண்டாவது உயிர்காக்கும் செயல் இதுவாகும். இவரது இந்தச் சாதுரியமும் அற்பணிப்பு உணர்வும் பலரின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
https://twitter.com/LokmatTimes_ngp/status/2112114629451358321/video/1
தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையே கண்ணாய்ச் செயல்பட்டு ஒரு பிராட்டியின் உயிரைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர் சோனல் இங்ளேவின் இந்த உன்னதமான முயற்சிக்கு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது இந்தச் சேவை மனப்பான்மை அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
