உத்தரப் பிரதேச மாநிலத்தில், வழக்கு ஒன்றில் தொடர்புடைய கணவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸ் படையினர், அங்கே தடுத்து நிறுத்த முயன்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, வயிற்றில் எட்டி மிதித்துக் கொன்ற பயங்கரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கணவரைப் போலிஸார் தர தரவென இழுத்துச் சென்றபோது, அவரைக் காப்பாற்ற ஓடிவந்த கர்ப்பிணிப் பெண்ணை, கொஞ்சமும் மனிதநேயமின்றி மிருகத்தனமாக மிதித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண், வயிற்றில் வளர்ந்த பிஞ்சுக் குழந்தையோடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த செய்தி மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “மனிதநேயற்ற முறையில் நடந்துகொண்ட போலிஸார் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
