வாலிபர் படுகொலை வழக்கு…! ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்டுக்கு போலீஸ் நோட்டீஸ்… விசாரணைக்கு ஆஜராவதில் புதிய திருப்பம்…!!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டம் பந்த்வால் தாலுகாவில் கடந்த 2025 மே 27 அன்று 32 வயதான அப்துல் ரஹ்மான் என்பவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் பந்த்வால் கிராமப்புற போலிஸார், ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்டுக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இக்கொலை வழக்கு விசாரணையின் போது வெளிவந்த சில முக்கியமான உண்மைகளைச் சரிபார்ப்பதற்காகக் கல்லட்கா பிரபாகர் பட்டின் வாக்குமூலம் பெறப்பட வேண்டியது அவசியமாக உள்ளது என்றும், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னரே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

போலிஸார் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளபடி சனிக்கிழமையன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், தனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதாகக் கூறி, போலிஸார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கக் கல்லட்கா பிரபாகர் பட் 1 மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார். பந்த்வால் கிராமப்புற காவல் நிலையத்தில் பதிவான இந்த வழக்குத் தொடர்பாக போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.