திக் திக் திக்… உயிர்காக்கும் மருந்துகளில் கொடூர மோசடி… 90+ கிளினிக்களுக்கு விநியோகிக்கப்பட்ட போலி மருந்துகள்… கும்பலின் மாஸ்டர்மைண்ட் கைது… பகீர் பின்னணி…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த, ரூ 5 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போலி மற்றும் காலாவதியான உயிர்காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், பிரதான குற்றவாளியான பிரசாந்த் ரஞ்சன் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருந்து வலையமைப்பு வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து அஜர்பைஜான் நாட்டிற்குத் தப்பிச் சென்ற இவர், சிறப்பு புலனாய்வுத் குழுவின் அழுத்தத்தால் இந்தியா திரும்பிய நிலையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இந்த போலி மருந்து கும்பல் 90-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களுக்கு ஆபத்தான போலி மருந்துகளை விநியோகித்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த ‘கிருபா ஹெல்த்கேர்’ மருந்தக உரிமையாளர் வீரேஷ் குமார் ஜெயின் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சதித்திட்டம் தொடர்பான சோதனைகள் கர்நாடகா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

   

இவ்வழக்கின் தொடர்ச்சியாக, போலி மருந்து விநியோகத்தில் தொடர்புடைய சில்லறை, மொத்த விற்பனையாளர்களின் 16 மருந்து உரிமங்களை கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளதுடன், 8 உரிமங்களை இடைநீக்கம் செய்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டவற்றில் ஃபைசர் மருந்து நிறுவனத்தின் கிடங்கும் ஒன்றாகும். பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டறியும் பணியில் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளதுடன், பொதுமக்கள் மருந்துகளை வாங்கும்போது பேக்கேஜிங் மற்றும் QR கோட்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.