“ராங் ரூட்டில் சென்ற கார்…” தனிமையில் நெருங்கி வந்த ஓட்டுனர்… காரில் இருந்து குதித்து அலறி சத்தம் போட்ட பெண்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் பகுதியில் பெண் பயணி ஒருவரிடம் கேப் ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷம்ஷாபாத் பகுதியில் காரில் பயணித்த இளம்பெண்ணைக் கூட்டிச் சென்ற கேப் ஓட்டுநர், தொண்டுபள்ளி டோல் பிளாசா அருகே சென்றபோது திடீரெனத் தனது பாதையை மாற்றி, ஆள் நடமாட்டமில்லாத தனிமையான காட்டுப் பகுதிக்குக் காரைத் திருப்பியுள்ளார்.

அங்கு வைத்து அந்த இளம்பெண்ணிடம் ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகக் காரில் இருந்து வெளியே குதித்து உரத்த குரலில் அலறி உதவி கேட்டுத் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்ற பயத்தில், அந்த கேப் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து காரை எடுத்துக்கொண்டு தலைதெறிக்கத் தப்பியோடியுள்ளார்.

   

அவ்வாறு தப்பியோடும்போது, அந்தப் பெண் காரில் விட்டுச் சென்ற பையில் இருந்த ரூ.60,000 ரொக்கப் பணத்தையும் அந்த ஓட்டுநர் எடுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள ஷம்ஷாபாத் போலிஸார், தலைமறைவாக உள்ள கேப் ஓட்டுநரைப் பிடிக்கத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.