தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா (42) என்பவரின் மகன் தேவராஜ் (19). கூலித் தொழில் செய்து வரும் தேவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் தீவிரமாக இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் காவலரின் தொப்பியை அணிந்துகொண்டு தேவராஜ் அட்டகாசம் செய்துள்ளார். இதையடுத்து இண்டூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த மகனைப் பாராட்டி மீட்க எண்ணிய தாய் சின்னபாப்பா, சுமார் ரூ. 40,000 வரை சிரமப்பட்டுச் செலவு செய்து, நேற்று முன் தினம் தான் தேவராஜை ஜாமீனில் வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்ததும், தேவராஜின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சின்னபாப்பா அவனுக்குப் புத்திமதி கூறியுள்ளார். ஆனால், ஜாமீனில் எடுத்து வந்த தாயின் நல்லுரையைக் கேட்டுத் திருந்துவதற்குப் பதிலாக, தன்னைக் கேள்வி கேட்பதா என்ற ஆத்திரத்தில் தேவராஜ் தாய் மீது கோபமடைந்துள்ளார்.
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தேவராஜ், வீட்டிலிருந்த இரும்பு ராடால் தனது பெற்ற தாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார். சின்னபாப்பாவின் அலறல் சப்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த கதவின் சாவிக் துவாரத்தின் வழியாகப் பார்த்தபோது, தேவராஜின் கையில் ரத்தக் கறையுடன் இரும்பு ராடு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இண்டூர் காவல்துறையினர், தேவராஜை நிதானமாகப் பேசி கதவைத் திறக்க வைத்து அவனைக் கைது செய்தனர். வீட்டிற்குள் சின்னபாப்பா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
முன்னதாக, தேவராஜ் கஞ்சா போதையில் தான் இந்த கொடூரக் கொலையைச் செய்தார் எனச் செய்திகள் பரவிய நிலையில், காவல்துறையினர் அதனை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர். “குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ், தன்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்ற ஆத்திரத்திலும் ஈகோவினாலும் தான் தன் தாயைக் கொலை செய்துள்ளார்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தாயின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், தேவராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயையே மகன் அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெருஞ் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…