12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…! ரத்த கரையை துடைக்க சொன்ன போலீஸ்… ஆதாரத்துடன் கதறிய பெற்றோர்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 10, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் 12 வயது சிறுமி ஒருவர் ராகுல் திவாரி மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தால் சிறுமியின் அசிங்கப்பட்ட ஆடைகள் மற்றும் இரத்தம் படிந்த பொருட்கள் ஆதாரமாக உள்ள நிலையிலும், கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தொடர் இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்றபோது, சிறுமியின் இரத்தம் படிந்த நாற்காலி மற்றும் கட்டிலை துடைக்குமாறு போலீசார் தங்களை வற்புறுத்தியதாகப் பெற்றோர் வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீதி கேட்டு சிறுமியின் பெற்றோர் அழுது புலம்பிய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முக்கிய குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும், இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்துத் தங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.