#BIG BREAKING: வரலாற்றிலேயே முதல்முறை… நெல்லுக்கு ரூ.2,600, கரும்புக்கு ரூ.4,000.. CM விஜய் அறிவித்தார்…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உழவர் நலன் சார்ந்த மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து, கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.289 ஊக்கத்தொகையாக உயர்த்தப்பட்டு மொத்தம் ரூ.2,750-ம், பொதுரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.159 உயர்த்தப்பட்டு மொத்தம் ரூ.2,600-ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு, மொத்தம் ரூ.4,000 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றுச் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை உயர்வு, வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், விவசாய உற்பத்தியையும் பெருமளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.