சற்றுமுன்: முழு கடனும் தள்ளுபடி…. பேரவையில் வெளியிட்டார்… குஷியான அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக சார்பில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காரசாரமாக வலியுறுத்தினார். தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட ரூ.21,000 கோடி கடனை எப்போது முழுமையாகத் தள்ளுபடி செய்யப் போகிறீர்கள் எனக் கேள்வியெழுப்பிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க உடனடி நடவடிக்கை தேவை என வற்புறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் காந்திராஜ், ஆட்சி அமைந்த 3 மாதங்களிலேயே ரூ.6,000 கோடி வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள 14.43 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளதாகவும் கூறி, அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து விவசாயிகளைச் சென்றடையும் என உறுதிபடத் தெரிவித்தார்.