திருச்சியில் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி காரில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 13 ஆண்டுகள் ஆகியும் கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை. போலீசார் பலவிதமான கோணங்களில் விசாரணை நடத்தியும் முக்கிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் டிஐஜி அருண்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு வழக்கை விரைவாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து திருச்சி மதுரை நெல்லை சென்னை புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் ராமஜெயம் கொலை குறித்து விசாரிக்க மார்க் செய்யப்பட்ட முக்கிய இடங்களில் ஒன்றான திருச்சி பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டரிலும் தீவிர விசாரணை நடத்தினர். தியேட்டர் உரிமையாளர் மற்றும் அங்குள்ள ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
2012ம் ஆண்டுக்கு பிறகு சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த அந்த சினிமா தியேட்டர் பிறகு புதுப்பிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டுக்குப் பின்பு மீண்டும் செயல்பட தொடங்கியது. ராமஜெயம் கொலை தொடர்பாக அந்த தியேட்டரில் வைத்து ஏதும் சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் மர்மம் நீடிக்கும் நிலையில் ராமஜெயம் கொலை குற்றவாளிகள் விரைவில் டிஐஜி வருண்குமார் விசாரணையில் சிக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த…
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (நிலக்கோட்டை சர்வேயர்). இவருக்கும் காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்…
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் வழக்குப்பதிவுகளும் சோதனைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுக முக்கியப் பிரமுகர்கள்…
"மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என போலி குறுஞ்செய்தி அனுப்பி, மின்சார வாரியத்தின் பெயரில் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடும் புதிய வகை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.…
திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (35). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், விநாயகர்…