திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (35). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலையை வைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார். வழிபாடு முடிந்ததும் மாலையில், அந்தச் சிலையை எண்ணூர் பாரதியார் நகர் அருகே உள்ள கடலில் கரைப்பதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இருப்பினும், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி காமாட்சி, கமலக்கண்ணனின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அழைப்பை அவர் ஏற்காததால் பதற்றமடைந்த காமாட்சி, பாரதியார் நகர் கடற்கரைக்கு விரைந்து சென்று தேடியுள்ளார். அங்கு கமலக்கண்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கரையில் நிறுத்தப்பட்டிருப்பதையும், அதிலேயே அவரது செல்போன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, உடலைக் விரைவாக மீட்டுத் தருமாறு திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ., தீயணைப்புத் துறையினரையும் உள்ளூர் மீனவர்களையும் மீட்புப் பணியை முடுக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீவிரத் தேடுதலில், கரைக்கு அருகே சுமார் 30 மீட்டர் தொலைவில் கமலக்கண்ணனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…