அய்யோ நெஞ்சே பதறுது… 3வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை கொன்று புதரில் வீசிய தாய்… தமிழகத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

மதுரை மாவட்டம் சோரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் தென்காசி பகவதிபுரத்தை சேர்ந்த கண்ணன் (25) என்ற வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த கலாசூர்யா(25) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். கலா சூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு பேருடன் திருமணம் ஆகி அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதில் இரண்டாவது கணவர் மூலமாக அவருக்கு ஷிவானி என்ற இரண்டு வயது பெண் குழந்தையும் இருந்தது. இதனிடையே கலா சூரியாவுக்கும் கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கூறிவந்துள்ளார்.

கடந்த மாதம் ஐந்தாம் தேதி கலா சூரியா கடைக்கு சென்று இருந்த போது கண்ணன் அந்த இரண்டு வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது பற்றி அறிந்த கலா சூர்யா அதிர்ச்சி அடைந்தார். பிறகு இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதி புதரில் வீசிவிட்டனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கலா சூரியா கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள தன்னுடைய தாய் சந்தியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவரிடம் குழந்தை எங்கே என்று சந்தியா கேட்டுள்ளார். அப்போது கலா சரிவர பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த சந்தியா போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் தகவல் அறிந்த கண்ணன் நேற்று கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரணடைந்தார். அவரிடம் விசாரித்ததில் குழந்தையை கொன்று புதரில் உடலை வீசியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரையும் கலாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு காட்டுப்பகுதிக்கு சென்று குழந்தையின் சடலத்தை தேடிய போது ஒரு மாதமானதால் குழந்தையின் எலும்புகள் மட்டும் கிடைத்தது. அதனை கைப்பற்றிய போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

ஐயோ… பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த… இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…

4 minutes ago

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

18 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

27 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

35 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

13 மணத்தியாலங்கள் ago