தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தவிர்க்க இயலாத பாடல் ஆசிரியர்களின் ஒருவர்தான் சினேகன். தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக அவர் பணியாற்றி வந்தாலும் தமிழ் சினிமாவில் பலராலும் மறக்க முடியாத பல நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். திருச்செல்வம் என்ற பெயரோடு சென்னைக்கு வந்த இவர் வைரமுத்துவிடம் தான் பல ஆண்டுகளாக பணியாற்றினார்.
அப்போதுதான் சினேகன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது பூவே என்ற திரைப்படம் மூலம் கடந்த 1997 ஆம் ஆண்டு பாடல் ஆசிரியராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார் 2001 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி என்ற திரைப்படம் மூலம் தான் பாடலாசிரியர் சினேகனுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அந்தப் படத்தில் அவரவர் வாழ்க்கையில், அழகான தடுமாற்றம், சின்ன வயசுல, தோழா தோழா கனவு தோழா மற்றும் தாயே உன்னையே ஆகிய ஐந்து பாடல்களையும் எழுதியது சினேகன் தான்.
தொடர்ந்து தமிழ் திரை உலகில் சிறந்த பாடல் ஆசிரியராகவும் நடிகராகவும் பணியாற்றி வரும் சினேகன் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் பிரபலமான நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கன்னிகா ரவியை சினேகன் திருமணம் செய்து கொண்டார். சினேகன் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில் அவர்களுக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தைகளுக்கு காத,ல் கவிதை என்று பெயர் வைத்தார். இந்த நிலையில் தற்போது தங்களுடன் இரட்டை குழந்தைகளுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி தங்களுடைய சொந்த ஊரில் மொட்டை போட்ட நெகிழ்ச்சியான தருணத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சினேகன்.
View this post on Instagram
