பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் காவ்யா அறிவுமணி . அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்து 2022 ஆம் ஆண்டு மிரல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான ரிப்பப்ரி படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்திருந்தார். தற்போது சீரியல் மற்றும் சினிமா என்று இரண்டு துறைகளிலும் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றார்.
இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் காவியா அறிவுமணி இதிலிருந்து விலகிய கையோடு அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் ஒரு இன்ஸ்டா பதிவில் நாம் ஒரு திட்டத்தை வைத்திருந்தால் விதி வேறொரு திட்டத்தை நமக்காக வைத்திருக்கிறது. அந்த திட்டம் முழுக்க முழுக்க கனவு, நம்பிக்கை, சினிமாவின் மகிமை கொண்டிருக்கிறது. இந்த பயணத்தில் நான் எங்கு தொடங்கி எங்கு வந்து நின்று கொண்டிருக்கிறேன் என்பதை உணர முடிவதாகவும், எதிர்காலத்தில் ஏராளமான படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவை குறித்து அறிவிப்புகள் விரைவில் வரும்” என்று கூறியுள்ளார்.
