கண்ணதாசன் சொன்ன ஒரு வார்த்தை… இறந்தபின் நண்பன் கோரிக்கையை நிறைவேற்றிய வாலி… பல வருடங்களுக்கு பின் வெளிவந்த விஷயம்..!!

By Soundarya on ஆனி 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் வாலிபக்கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவிஞர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியாக இருந்தவ.ர் இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளார்கள்.  கவிஞர் வாலி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத போது தன்னுடைய நண்பர்களுடன் டிவிஎஸ் கம்பெனி வேலைக்கு சேர கிளம்பி இருக்கிறார். மதுரைக்கு அப்பொழுது கண்ணதாசன் எழுதிய மயக்கமா கலக்கமா பாடலைக் கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை விட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார். அதன் பிறகு  எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்ட  முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடலை கொடுத்துள்ள வாலி கண்மலர் என்ற படத்துக்காக ஓதுவார் என்ற பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அதன் பிறகு அமெரிக்கா செல்வதற்கு முன்பாக வாகினி ஸ்டுடியோவில் கண்ணதாசன் வாலியை சந்தித்திருக்கிறார். அப்பொழுது வாலி என்ன அண்ணே இப்போ அமெரிக்காவுக்கு நீங்கள் வரணும்னு யார் அழுதாங்க. எதற்காக போறீங்க என்று கேட்டாராம். இதை கேட்ட கண்ணதாசனும் இல்லை போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்ல கண்ணதாசன் அதன் பிறகு வரவே இல்லையாம்.

   

அதே சில வருடங்களுக்கு முன்பு ஓதுவார் பாடல் குறித்து வாலியிடம்  போனில் பேசிய கண்ணதாசன் நான் ஏதோ தேவாரம், திருவாசகம் என்று நினைத்தேன். இது நீ எழுதிய பாடல் தானாமே என்று சொல்லிவிட்டு நான் இறந்தால் நீ தான் பாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதேபோல கண்ணதாசன் இறந்து  மூன்றாவது நாள் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய வாலி எழுத படிக்க தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். அழகிய கவிதை புத்தகத்தை கிழித்துப் போட்டு விட்டான். என்று கவிதை பாடியிருக்கிறார். இதை வாலியே ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.