#image_title
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கவிஞர்கள் இருக்கின்றனர். இன்று எப்படி நாம் வைரமுத்து, வாலி, யுகபாரதி என புகழ்கிறோமோ, அதேப் போல 50, 60 களில் கொடிகட்டி பறந்த கவிஞர்களில் ஒருவர் தான் தாமரை. 1997 இல் சென்னைக்கு வந்த இவர் இசையமைப்பாளர் ஆதித்யனிடம் வாய்ப்பு கேட்க சென்ற இடத்தில் ஓர் ஆங்கில பாடலுக்கு வரிகள் எழுத சொல்லி இருக்கிறார். அதை தாமரை பிரதானமாக பிடித்து பாடல் எழுதியுள்ளார்.
#image_title
அதை பார்த்த ஆதித்யன் உங்களிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கு என்று பாராட்டி உள்ளார். அவர் கொடுத்த உற்சாக நம்பிக்கை தான் இன்று திரை உலகின் உச்சத்தில் அவரை கொண்டு போய் சேர்த்துள்ளது. சீமானின் இனியவளே என்ற பாடல் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்திலிருந்து மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா என்ற பாடலும் எழுதி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் .
2000ம் ஆண்டில் மின்னலே படத்தில் வசீகரா என் நெஞ்சினிக்க என்ற பாடலை எழுதி இருந்தார். ஒரு பாடலில் ஒரு வரி மட்டுமல்ல ஒரு வார்த்தையை கூட தவிர்த்து பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய பாடல்கள் அமைந்திருக்கும். கொங்கு நாட்டிலே பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து , பொருளியல் படிப்பு படிக்க கல்லூரிக்குள் நுழைந்த இவர் போட்டி நிறைந்த திரையுலகில் புதுமை நிறைந்த வரிகளைப் படைத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டார்.
தூய தமிழில் தான் பாடல்கள் எழுதுவேன். இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன்’ என்ற நிபந்தனையோடு பாடல் எழுத ஆரம்பித்தவர். அதை இன்றும் கடைபிடித்து வருகிறார். அதனால் அவர் பல பாடல்கள் எழுதாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவர் எழுதியிருக்கும் பாடல்கள் எல்லாமே வார்த்தைகளால் உயிரூட்டப்பட்டவை ஆகும்.
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…
ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…