#image_title
சில நாட்களுக்கு முன்பு Netflix இல் நயன்தாரா விக்னேஷ் திருமண டாக்குமென்ட்ரி வெளியானது. இவர்களது திருமணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்து விட்டது. ஆனால் திருமண டாகுமெண்டரி வெளியாகுவதற்கு இவ்வளவு தாமதமானதற்கு காரணம் தனுஷ் தான். அவர்தான் என்ஓசி சர்டிபிகேட் தரவில்லை என்று ஆல்பம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு நயன்தாராவும் விக்னேஷ் சிவுனும் குற்றச்சாட்டை வைத்திருந்தனர். இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டதால் மக்கள் இவர்களது ஆல்பத்தை பார்க்க விரும்பவில்லை.
ஆனால் இந்த சர்ச்சையை கிளப்பியதால் அனைவரும் இந்த டாக்குமெண்டரியை சென்று பார்த்தனர். நயன்தாராவுக்கும் விக்னேஷ் அவர்களுக்கும் இடையே காதல் ஏற்பட்டது நானும் ரவுடிதான் என்ற படத்தில் மூலமாக தான். இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். தங்களது காதலை பற்றி திருமண ஆல்பத்தில் கூறும் போது நானும் ரவுடிதான் படத்தின் காட்சியை பயன்படுத்த எல் ஓ சி சர்டிபிகேட் தனுஷ் இடம் கேட்டிருக்கின்றனர். பிறகு தனுஷ் அனுமதி இல்லாமலேயே நெட்லிக்ஸில் அந்த பயன்படுத்தியிருந்தனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
இந்நிலையில் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த தனுஷ் இன்று ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். அது என்னவென்றால் தன் அனுமதி இன்றி நானும் ரவுடிதான் படத்தில் வரும் காட்சிகளை நயன்தாரா திருமண வீடியோவில் பயன்படுத்தி Netflix மூலமாக வெளியிட்டதால் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் தனுஷ்.
நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஜன.8ல் விசாரணை நடந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 8 ஆம் தேதிக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…
காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித…
சிறப்பு லட்சுமி பூஜை செய்தால் கோடி கோடியாகப் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி, ஏழைக் குடும்பத்து இளம்பெண்களைப் பாலியல்…
தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…