வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ் செண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (30) என்பவர், திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், சமையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், மாதனூர் பகுதியைச் சேர்ந்த 4-ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர், பள்ளி விடுமுறைக்காக செண்டத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பகுதியில் வசித்து வந்த ரங்கநாதன், அந்தச் சிறுமியிடம் நயமாகப் பேசி பழகி வந்துள்ளார். சிறுமியின் நம்பிக்கையைப் பெற்ற அவர், சம்பவத்தன்று சிறுமியிடம் “முயல் பிடித்துத் தருவதாக” ஆசை வார்த்தைகளைக் கூறி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் வைத்து சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து தனது தாயிடம் நடந்தவற்றை அழுதுகொண்டே விவரித்துள்ளார்.
மகள் கூறியதைக் கேட்டுப் பதறிப்போன பெற்றோர், உடனடியாக மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரங்கநாதனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ரங்கநாதன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மீட்கப்பட்டு, அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளும் முறையான மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில், அண்டை வீட்டாராலேயே சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…