அன்புமணிக்கு செக்… தேதி குறித்த ராமதாஸ்… பாமகவில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

தமிழகத்தில் டிசம்பர் 12ஆம் தேதி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பாக நடைபெற உள்ள மாநாடு தமிழகமே குலுங்குகின்ற அளவுக்கு நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அரக்கோணம் அடுத்த நெமிலி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சார்பாக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், குடிப்பழக்கத்துடன் கஞ்சாவும் சேர்ந்து கொண்டு இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து வருகின்றது. மாறி மாறி அனைவரும் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.

முன்பெல்லாம் யாராவது ஒரு வீட்டில் தான் குடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டில் யாராவது ஒருவர் தான் குடிக்காமல் உள்ளனர். அந்த அளவுக்கு குடிப்பழக்கம் நாட்டையும் வீட்டையும் அழித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள 324 ஜாதிகளுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகமே குலுங்கும் அளவுக்கு அமையும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். நாம் செல்லக்கூடிய இடம்தான் எப்போதுமே வெற்றி. ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும்.

   

கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அடுத்த மாதமே நான் அறிவிப்பேன். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே, ஆக்கல், அழித்தல், காத்தல் மூன்றும் உள்ளது பெண்களுக்கே. பெண்கள் இல்லை என்றால் இந்த உலகமே கிடையாது. பெண் சமூகத்திற்கு எதிராக யாராவது பேசினால் அல்லது செயல்பட்டால் அவர்களை அழிக்கும் சக்தி பெண்களிடம் தான் உள்ளது. தேர்தலில் காசு கொடுப்பார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று உறுதியாக இருக்க வேண்டும். டிசம்பர் 17ஆம் தேதி அன்புமணி அறிவித்துள்ள சிறை நிரப்பம் போராட்டம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் நாங்கள் டிசம்பர் 12 ஆம் தேதி நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் தமிழகமே குலுங்கும் வகையில் அமையும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.