BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு… இதுவரை இல்லாத புதிய உச்சம்….!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

நாமக்கல் கோழி பண்ணை வரலாற்றில் முதல் முறையாக முட்டை கொள்முதல் விலை 6 ரூபாயை தொட்டுள்ளது. நேற்று புதிய உச்சமாக 5.95 ஆக உயர்ந்த நிலையில் இன்று மேலும் ஐந்து காசுகள் அதிகரித்துள்ளது. கோழி தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வை முட்டையின் விலை ஏற்றத்திற்கு காரணம் என்று பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் விலை அதிகரிப்பால் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புள்ளது.