2026 சட்டமன்றத் தேர்தல் களம் கோடை வெயிலையும் மிஞ்சும் அளவுக்கு தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பிளவைச் சந்தித்துள்ளது. “நானே கட்சி, நானே தலைமை” என்று அதிரடி காட்டிய டாக்டர் ராமதாஸ், இன்று தேர்தல் களத்தில் வேட்பாளர்களைக் கூடத் திரட்ட முடியாமல் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி என அனைத்தும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அன்புமணி ராமதாஸ் வசம் சென்றுவிட்ட நிலையில், தைலாபுரம் தோட்டம் தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்கப் போராடி வருகிறது.
இந்த மோதலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது வன்னியர் சங்க மாநாடு மற்றும் வாரிசு அரசியல் குறித்த முடிவுகள்தான். அன்புமணி ராமதாஸைக் கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, பதிலுக்கு அன்புமணியும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிப் போர்க்கொடி தூக்கினார். இறுதியில் சட்டப் போராட்டங்களின் முடிவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்களின் ஆதரவோடு அன்புமணி தரப்பு அங்கீகரிக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ராமதாஸுடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அன்புமணியின் பக்கம் சாய்ந்தனர், இது அக்கட்சியின் அதிகார மையத்தை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது.
தற்போது திமுக, அதிமுக அல்லது தமிழக வெற்றிக் கழகம் என எந்தப் பெரிய கட்சியும் ராமதாஸ் தரப்புக்கு ‘கிரீன் சிக்னல்’ கொடுக்காததால், அவர் சசிகலாவுடன் கூட்டணி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜிகே மணி, அருள் போன்ற மிகச்சில விசுவாசிகள் மட்டுமே ராமதாஸுடன் எஞ்சியுள்ளனர். வட மாவட்டங்களில் 70 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டாலும், 10 தகுதியான வேட்பாளர்களைக் கூட இன்னும் இறுதி செய்ய முடியாமல் ராமதாஸ் தரப்பு திணறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு காலத்தில் வட தமிழகத்தைத் தன் விரல் அசைவில் வைத்திருந்த ஒரு பேரியக்கத்திற்கு ஏற்பட்ட பெரும் சரிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது ராமதாஸின் பேரன் தொடர்பான பதவி விவகாரம்தான். ஜிகேஎம் தமிழ்குமரன் இளைஞர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகியதும், அந்த இடத்திற்குத் தனது பேரனை அமர்த்த ராமதாஸ் எடுத்த அவசர முடிவுதான் கட்சியைக் கூறுபோட்டது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தற்போது ஜிகேஎம் தமிழ்குமரன் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸை நம்பி வந்த ஜிகே மணி மற்றும் அருள் போன்ற தலைவர்கள், அடுத்தகட்டமாகத் தங்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். 2026 தேர்தல் முடிவு, ராமதாஸின் அரை நூற்றாண்டு கால அரசியல் பயணத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…