பரபரக்கும் பாமக… தலைவர் பதவி யாருக்கு? 2026- ல் யாருடன் கூட்டணி?… இன்று பொதுக்குழுவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!

By Nanthini on ஆவணி 17, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு பாமகவின் தலைவராக அன்புமணிக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் திண்டிவனம் சாலையில் விழுப்புரத்தில் உள்ள சங்கமித்ரா அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பாமகவின் சிறப்பு பொது குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ராமதாஸ் அறிவித்துள்ளார். குறிப்பாக ராமதாஸ் மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. அதனைப் போலவே புதிய இளைஞர் அணி தலைவரை நியமிக்கவும், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்று அறிவிக்கவும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.