தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு இந்த முறையும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கையோடு முதல்வர் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்ட ஒரு பக்கம் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது. இவர்களுக்கு நடுவே விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் பயணித்து மக்களுக்கு புதிய ஆட்சியை தர வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு பல சினிமா பிரபலங்கள் அரசியலில் இணைய விருப்பம் காட்டி வருகிறார்கள். அதில் சிலர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளனர். அந்த வகையில் அரசியலில் நுழையும் வாய்ப்பு இருப்பதாக சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவீர்களா? என கேட்டதற்கு சிரித்துக்கொண்டே நழுவி சென்றார். இருப்பினும் சூழ்நிலையை பொறுத்து முடிவெடுப்பேன் என அவர் உறுதியளித்துள்ள நிலையில் அவரும் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நமீதா, குஷ்பூ, கஸ்தூரி உள்ளிட்ட நடிகைகள் பலரும் அரசியலில் உள்ள நிலையில் இவர்களுடைய லிஸ்டில் சோனியா அகர்வால் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
