மிரட்ட நினைத்தவங்க மிரண்டு போயிட்டாங்க… உடனே ஓடி வர நாங்க என்ன பழனிச்சாமியா?.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஸ்டாலின்…!

By Nanthini on ஆவணி 17, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்க முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை இந்த முறை பிடித்து விட வேண்டும் என்று பக்காவாக காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே நேற்று அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது புதிய பரபரப்பை கிளப்பியது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்த நிலையில் நேற்று சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், உறவினர் வீட்டில் ED ரெய்டு நடத்தினால் ஓடிவந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிச்சாமியா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களை மிரட்ட நினைத்தவர்கள் இன்று மிரண்டு போய் இருப்பதாகவும் கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னெல்லாம் நடக்கும் என எச்சரித்தோமோ அதுவெல்லாம் நடப்பதாகவும் ஒத்து வராத எதிர்க்கட்சிகள் ED ஐ கொண்டு மிரட்டப்படுவார்கள் என கூறியிருந்தோம். அதுவும் நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.