தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே புதிய புயலை கிளப்பும் விதமாக நேற்று அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று நடந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு தமிழக அரசியல் களத்தை ஆட்டிப்படைத்துள்ளது.
தென் மாவட்டங்களில் நான்கு முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி இடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ரெய்டு திருவண்ணாமலையில் நடக்கலாம் என நேற்று இ பி எஸ் தேர்தல் பரப்புரையில் பேசி உள்ளார். இது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
