தமிழக அரசியல் களம் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் கட்சியின் இறுதி முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக செயல் தலைவர் காந்திமதி தெரிவித்துள்ளார். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு, “No, அப்படி எதுவும் இல்லை” என அவர் ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம் பாமக – தவெக கூட்டணி குறித்த யூகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளன.
இந்த அதிரடி அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தவெக தரப்பிலும் கூட்டணி குறித்த ஆர்வம் காட்டப்படாத நிலையில், காந்திமதியின் இந்த வெளிப்படையான மறுப்பு, விஜய் தனது முதல் தேர்தலை தனித்தே சந்திக்கப் போகிறார் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பிற கட்சிகளுடனான கூட்டணி கதவுகளும் மெல்ல அடைபடுவதால், ‘தனி ஒருவனாக’ களம் காண தவெக தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், இன்னும் இரண்டு நாட்களில் பாமக வெளியிடப்போகும் அந்த ‘இறுதி முடிவு’ பழைய கூட்டணியின் தொடர்ச்சியா அல்லது புதிய திருப்பமா என்பதை அறிய அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…