மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச வீடு… யாரெல்லாம் பயன் பெறலாம்?.. எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!

By Srimathi on ஆவணி 24, 2025

Spread the love

மத்திய அரசின், “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” (PMAY) திட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் செயல்படுத்தப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு, நிதி உதவி வழங்கிய வீட்டு வசதி செய்து குடுத்து, அவர்களில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். அவர்கள் வாங்கும் வீட்டு கடனுக்கான வட்டியில் ரூ.2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

தகுதிகள் :

   
  •  ஆதார் எண் அவசியம்
  • இந்த வருமான பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும்
  1. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) – ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை
  2. குறைந்த வருமான குழு (LIG) -ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை
  3. நடுத்தர வருமான குழு I (MIG-I) – ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை
  4. நடுத்தர வருமான குழு II (MIG-II) – ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை
  • விண்ணப்பதாரர்/குடும்ப உறுப்பினர்கள் பெயரில், இந்தியாவில் கூரை கொண்ட வீடு சொந்தமாக இருக்க கூடாது
  • இதற்கு முன்பு மத்திய / மாநில அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பலன்களை பெற்றிருக்க கூடாது.
  • EWS & LIG பிரிவினருக்கு கட்டப்படும் வீடு, குடும்பத்தின் பெண் தலைவர் பெயரிலோ/ கணவன்-மனைவி இருவரும் இணை உரிமையாளர்களாகவோ இருப்பது கட்டாயமாகும்.

 யாருக்கு முன்னுரிமை ?

   
  • 16 – 59 வயதுக்குட்பட்ட ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பங்கள்
  • மாற்றுத்திறனாளி உறுப்பினர் கொண்ட குடும்பங்கள்
  • பட்டியல் இன & பட்டியல் பழங்குடியின குடும்பங்கள்
  • உடல் தகுதியுள்ள வயது வந்த உறுப்பினர் இல்லாத குடும்பங்கள்
  • சொந்த நிலம் இல்லாமல், தினக்கூலி மூலம் வருமானம் பெறும் குடும்பங்கள்

விண்ணப்பிப்பது எப்படி ?

 
  • நகர்ப்புற மக்கள் pmaymis.gov.in என்ற இணையதளத்திலும், கிராமப்புற மக்கள் pmayg.nic.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.