ராஜஸ்தானின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஜெய்ப்பூரில் உள்ள சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீளச்சுவர் இடிந்து விழுந்தது.
ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரௌலி ஆகிய இடங்களில் 10 சென்டிமீட்டருக்கு அதிகமான மழை பதிவாகி இருக்கிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில், முதலாம் மான்சிங் என்ற அரசரால் கட்டப்பட்ட அமீர் கோட்டையின் சுவர் நேற்று (23/8/2025) இடிந்து விழுந்தது. இதன் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 2013 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட அமீர் கோட்டை, ராஜபுத்திர கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
VIDEO | Jaipur, Rajasthan: 200-feet long wall collapses in Amer Fort.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/71ctptxqd6
— Press Trust of India (@PTI_News) August 23, 2025
