திரைபிரபலங்கள் குவிந்த பிரபல நடிகர் மகள் திருமணம்.. மாலை எடுத்துக்கொடுத்து ஆசீர்வாதம் செய்த பிரதமர் நரேந்திர மோடி (வீடியோ)..

By admin on தை 17, 2024

Spread the love

மலையாள சினிமாவுலகில் மிக முக்கியமான நடிகராக இருப்பவர் சுரேஷ்கோபி. இவர் மணிசித்ரதாழ் படத்தில் நடித்த கேரக்டரில்தான் தமிழில் பிரபு நடித்திருந்தார். தமிழிலும் சுரேஷ்கோபி சில படங்களில் நடித்திருக்கிறார். தீனா படத்தில், அஜீத்குமாருக்கு அண்ணனாக நடித்திருப்பார். ஒரு படத்தில் சரத்குமாரும், சுரேஷ்கோபியும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருப்பர். அதே போல், ஐ படத்தில் வில்லன் டாக்டராக நடித்திருப்பார் சுரேஷ் கோபி. இவர் பாஜக எம்பியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்நிலையில் சுரேஷ்கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த திருமண விழாவில் மலையாள படவுலகின் திரைபிரபலங்கள் திரளாக கலந்துக்கொண்டனர். குறிப்பாக மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர், நடிகையர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். இந்த விழாவில், நிறைய அரசியல் பிரபலங்களும், தொழில் அதிபர்களும், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.

   

#image_title

 

இந்த திருமண விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராக பங்கேற்றார். அவர் சுரேஷ் கோபியின் மகள் மற்றும் மணமகன் ஆகியோருக்கு பூமாலைகளை எடுத்து தந்தார். அவரது முன்னிலையில், அவர்களது திருமணம் இனிதே நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களுடன் நலம் விசாரித்த பேசிய பின், பிரதமர் மோடி அங்கிருந்து கிளம்பினார். அவரது வருகையால், திருமண விழா மேலும் பலமடங்கு களைகட்டியது.