நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். அதே சமயம் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு விவசாயிகள் அனைவரும் கேஒய்சி அப்டேட் முடித்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் தற்போது வரை 19 தவணைகளாக தலா 2000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. முந்தைய தவணை பிப்ரவரியில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த தவணை ஜூன் 20 நாளை வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
