ஜப்பானில் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஹாங்காயில் இருந்து டோக்கியோ விற்கு 191 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 26,000 அடி கீழே இறங்கியது. 20 நிமிடங்களில் 3000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச் சென்றதால் ஆக்சிஜன் மாஸ்குகள் தானாக விழுந்தன. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் சிலர் உயில் எழுத தொடங்கி அன்பானவர்களுக்கு கடைசி செய்திகளை அனுப்பியுள்ளனர். பலர் தங்களுடைய இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கி பின் நம்பரையும் கூட எழுதி வைத்துள்ளனர்.
பதட்டமான சூழலில் விமானம் ஓசாகவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தின் அழுத்த கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பயணிகள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Terrifying moments aboard a Spring Airlines Boeing 737 from Shanghai Pudong to Tokyo Narita — the flight experienced a sudden rapid descent mid-air! pic.twitter.com/Y1kwyorAUA
— Turbine Traveller (@Turbinetraveler) June 30, 2025
