தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் தான் ரியாஸ் கான். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாரியாஸ் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளன.
View this post on Instagram
அவர்களின் மூத்த மகனான சாரிக் ஹாசன் தற்போது சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில் காதலை பெற்றோரிடம் சொல்லி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடந்தது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட மரியாவும் ஷாரிக்கும் இணைந்து அளித்த பேட்டியில், மரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளதாகவும் பிறகு ஷாரிக் இருவரையும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் மரியா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஷாரிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
