நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மகள். கடந்த 1995-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மாணிக்கம், காக்கை சிறகினிலே, நான் ராஜாவாகப் போகிறேன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு வனிதாவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் வனிதா போட்டியாளராக பங்கேற்றார். முதன் முதலில் கடந்த 2000-ஆம் ஆண்டு ஆகாஷை வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பின்னர் கடந்து 2007-ஆம் ஆண்டு தொழிலதிபரான ஆனந்தராஜ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார்.
அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2012-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு ஜோதிகா, ஜெய்னிகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த உறவும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பிரபல நடிகையான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தது குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. சோசியல் மீடியாவில் வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டனர். இத்தனை வருடங்களுக்கு பிறகு வனிதாவும் லட்சுமியும் மீண்டும் சந்தித்தனர். அதாவது சுகன் இயக்கத்தில் பிதா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தில் அனு, ஆதேஷ் பாலா உள்ளிட்ட முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
View this post on Instagram
நீண்ட இடைவெளிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வனிதாவும் லட்சுமியும் பார்த்துக் கொண்டனர். அப்போது வனிதா லட்சுமி அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகே சென்று உட்கார்ந்து ஹாய் என கூறினார். சிறிது நேரத்தில் வனிதா அந்த நாற்காலியில் இருந்து எழுந்து மற்றொரு நாட்களில் உட்கார்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.