மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By admin on ஆனி 13, 2024

Spread the love

பிரபல நடிகையான ஆத்மியா ராஜன் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு வெள்ளத்தூவல் என்ற மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்தார்.

என்ன சொல்ல ஏது பாடல் வரிகள் - மனம் கொத்தி பறவை | Cute couple songs, Cute  love couple images, Cute couple videos

   

 

   

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார். மனம் கொத்தி பறவை படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மலையாளத்தில் ரஞ்சன் பிரமோத்தின் ரோஸ் கிடாரினால் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு 2014-ஆம் ஆண்டு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற திரைப்படத்தில் நடித்து மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

 

மலையாளத்தில் ஜோசப் என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஆத்மியா நடித்தார். அதன் பிறகு தமிழில் சமுத்திரக்கனி உடன் இணைந்து வெள்ளை யானை என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் ஆத்மியாவுக்கும் கண்ணூரைச் சேர்ந்த கப்பல் துறையில் வேலை பார்க்கும் சனூப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு ஆத்மியா படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் ஆத்மியாவில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title