ஹரிஷ் கல்யாண் பட நடிகை திகழ்ந்த திகங்கனா சூர்யவன்ஷி தயாரிப்பாளரை ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தியில் ஃப்ரைடே, தெலுங்கில் ஹிப்பி உள்ளிட்ட திரைப்படத்தின் மூலமாக நடித்த அறிமுகமானவர் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி. இவர் தமிழில் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது பிரபல இந்திய நடிகர் ஜீனத் அம்மன் உடன் இணைந்து ஷோ ஸ்டாப்பர் என்ற வெப் தொடரில் நடித்திருக்கின்றார். இந்த தொடரில் நடிப்பதற்காக அவருக்கு 27 லட்சம் சம்பளமாக தரப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும் தனக்கு அதிக பணம் வேண்டும் என்று திட்டம் போட்ட நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒரு மோசடியை அரங்கேற்றி இருக்கின்றார்.
அதாவது தனக்கு பாலிவுட்டில் ஷாருக்கான் தெரியும், சல்மான்கான் தெரியும், அக்ஷய் குமாரை தெரியும் என்று ஷோ ஸ்டாப்பர் படத்தின் இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் மற்றும் தயாரிப்பாளரை ஏமாற்றி வந்துள்ளார். அதில் ஒரு படி மேலே சென்று இந்த வெப் தொடரை அக்ஷய் குமார் மூலமாக பிரபலப்படுத்தி விடலாம் என்று தயாரிப்பாளர்க்கும் இயக்குனருக்கும் ஆசை வார்த்தை கூறி இருக்கின்றார்.

இதை நம்பிய இயக்குனரோ சீரியஸாக எடுத்துக் கொண்டு தனது வெப் சீரியஸை எப்படியும் மக்களிடம் வெற்றி பெற செய்துவிடலாம் என்று எண்ணி இருக்கின்றார். இதற்காக தனக்கு அதிக அளவு பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த நடிகை கேட்க அவருக்கு 75 லட்சமும், அக்ஷய் குமார் பெயரில் 6 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று பட்ஜெட்டுக்கு மீறி அதிக அளவு பணம் கேட்டிருக்கின்றார்.
மேலும் அக்ஷய் குமாரிடம் இந்த வெப் சீரியஸை போட்டுக்காட்ட வேண்டும் என்று கூறி அந்த முழு எபிசோடும் இருந்த ஐபேடை இயக்குனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி சென்றிருக்கின்றார். பின்னர் நடிகை திகங்கனாவின் திருட்டு வேலை அனைத்தும் இயக்குனர் மணிஷ் ஷங்கருக்கு தெரிய வரவே அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சினிமாவில் படங்களே இல்லாமல் தவித்து வந்த திகங்கனா சூர்யவன்ஷிக்கு வெப் தொடரில் வாய்ப்பு கொடுத்த அவருக்கு துரோகம் செய்ய நினைத்திருக்கின்றார். அந்த நடிகை பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அந்த புகாரில் இயக்குனர் தெரிவித்து இருக்கின்றார். காவல்துறையினர் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கின்றார்கள். கதாநாயகியாக நடித்து வந்த திகங்கனா சூர்யவன்ஷி தற்போது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் வில்லியாக மாறி இருக்கின்றார். இந்த சம்பவம் தற்போது பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
