தமிழ், தெலுங்கு,மலையாள உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா. தனது கைவசம் 10 படங்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய இயக்குனராக கொடி கட்டி பறந்தவர் எஸ் ஜே சூர்யா. நடிகர் விஜய் வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த இவர் அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களை இயக்கினார். தற்போது இயக்கத்திற்கு ரெஸ்ட் விட்ட இவர் முழு நேரமும் நடிகராக மாறி இருக்கின்றார்.
இவரது நடிப்புக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பிஸியான நடிகராக வளம் வருகின்றார். தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜூலை 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்த எஸ் ஜே சூர்யா. இந்தியன் 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி என்ற திரைப்படத்திலும், அருண்குமார் சியான் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் வீர தீர சூரன் என்ற திரைப்படத்திலும்,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும், சர்தார் 2 திரைப்படத்திலும், சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 24 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். மிக பிஸியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
இது தமிழில் மட்டும் தான், தெலுங்கில் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார். இப்படி பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வரும் இவர் தமிழில் நடிப்பு அரக்கன் என்று பெயர் பெற்றிருக்கின்றார். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் நடிப்பு அரக்கனாக இருக்கும் பகத் பாஷிலுடன் இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.