இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சை குதிரை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. அதே நாளில் தான் பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் திரைப்படமும் ரிலீஸ் ஆனது 13 இளம் வயதினரை வைத்து பார்த்திபன் டீன்ஸ் கதையை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் பார்த்திபன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு புடிச்ச female ஆக்டர் சௌந்தர்யா. நானும் அவரும் இணைந்து இவன் என்ற படத்தில் நடித்தோம். எனக்கு பிடித்த நடிகர் நான் தான்.
தேடித்தேடி சின்ன சின்ன ரோல்ல சூப்பரா நடிக்கிறவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் ஏ வீரப்பன் என்பவர், சிறிய கதாபத்திரமாக இருந்தாலும் சூப்பராக நடித்திருப்பார். பசுபதி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் எம்.எஸ் பாஸ்கரும் சேர்ந்து டப்பிங் பேசி இருப்போம். 50 ரூபா சம்பளம் தருவாங்க. காலையில 7 மணியிலிருந்து நைட் 2 மணி வரைக்கும் டப்பிங் பேசுவோம்.
இப்ப அவரு ஸ்டேஜ்ல பெர்ஃபார்ம் பண்றது, நடிக்கிறது எல்லாத்தோட பேஸ்மென்ட் அங்க தான் ஆரம்பிச்சது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவ்வளவு நகைச்சுவையா பேசுவோம். வெறும் 50 ரூபா குடுத்துட்டு 15 கேரக்டருக்கு பேச வைப்பாங்க. காலைல இருந்து ராத்திரி வரைக்கும் பேச வைப்பாங்க. தொண்டையில் இருந்து ரத்தமே வர்ற மாதிரி இருக்கும். அந்த நேரம் நாங்க ரொம்ப கஷ்டத்துல இருந்தோம். அன்னைக்கு அவ்வளவு கஷ்டப்பட போய்தான் இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கோம் என பேசியுள்ளார்.