கழிவறை சென்ற நபர்… பிறப்புறுப்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்… ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சிசிடிவி காட்சி…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த செரிப் என்ற நபர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கழிவறை செல்வதற்காக சென்றபோது உணவகத்தில் மின்சார காருக்கு சார்ஜ் போட வந்த நபரின் இரண்டு வளர்ப்பு நாய் ஷெரிப்பை பார்த்து ஆக்ரோஷமாக குரைத்துள்ளது. பிறகு ஒரு நாய் ஆக்ரோஷமாக ஓடி வந்து அங்கு ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த ஷெரிப்பை ஆக்ரோசமாக பிறப்புறுப்பில் கடித்துள்ளது.

இதில் அவருடைய பிறப்புறுப்பில் நாயின் பற்கள் இறங்கியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு அதிகளவு ரத்தம் வெளியேறியது. உடனே சக பணியாளர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.